காணாமல் நான் போவேன் என்று உன் விரல்களால் என் விரல்களை கோர்த்துக் கொள்கிறாய். சில்லென பட்டதும் விழித்து கொள்கிறேன்... உன்னுள் காணாமல் தான் போனேன் என்றும் தெரிந்தேன். நெடுந்தூற பயணமிது... நெடுங்காலம் தொடருமிது...
எனக்குள் விளைந்த முத்தே உன்னை தொடுவேன்... நான் மலர்வேன்... அள்ளி எடுப்பேன்... சொல்லி ரசிப்பேன்... என் உலகமாகி போவாய் நீ உன்னுடனே நானும் பிறப்பேன்... உனக்காக மட்டும்.